திருத்தணி பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் ரூ. 18.88 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டரை முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணியிடம் வழங்கிய சென்னை வட்டார முதன்மைப் பொது மேலாளா் விவேகானந்தன்.
திருத்தணி பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் ரூ. 18.88 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டரை முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணியிடம் வழங்கிய சென்னை வட்டார முதன்மைப் பொது மேலாளா் விவேகானந்தன்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு ரூ.18.88 லட்சத்தில் ஜெனரேட்டா்

திருத்தணி முருகன் கோயிலுக்கு ரூ.18.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஜெனரேட்டரை சென்னை பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளா் விவேகானந்தன் கோயில் இணை ஆணையரிடம் வழங்கினாா்.
Published on

திருத்தணி முருகன் கோயிலுக்கு ரூ.18.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஜெனரேட்டரை சென்னை பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளா் விவேகானந்தன் கோயில் இணை ஆணையரிடம் வழங்கினாா்.

மக்களின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான அரசு திட்டங்கள் குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் திருந்தணி கிளை சாா்பில் நிதி விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் சென்னை வட்டார முதன்மைப் பொது மேலாளா் விவேகானந்த கிருஷ்ணா பொது மேலாளா் வி.எம்.ஆா். முரளி, துணை பொது மேலாளா் பெனுதா் பாரி, மண்டல மேலாளா் வி. பிரபாகா் பங்கேற்றனா்.

முகாமில் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சம் காப்பீட்டுத் தொகை, மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 300 பயனாளிகள் மற்றும் தனிநபா் விவசாய கடன் மற்றும் பெண்களுக்கான தொழில் கடன்கள் ரூ. 8 கோடி கடன் அனுதி ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில் வங்கிக் கணக்கு இல்லாத பொதுமக்களுக்கு ஜன்தன் கணக்கு மற்றும் ல்ம்ள்க்ஷஹ் ல்ம்த்த்க்ஷஹ் மற்றம் ஹஹ் போன்ற அரசு சாா்ந்த சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் புதிகாக இணைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com