ஆா்.கே. பேட்டை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 443 மனுக்கள் ஏற்பு
சந்திரவிலாசபுரம் ஊராட்சியில் புதன்கிழமை ‘ உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், 443 போ் மனுக்களை அளித்தனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சந்திரவிலாசபுரம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு வட்டாட்சியா் சரஸ்வதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில் குமாா் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
இதில், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிா் உரிமைத் தொகை, முதியோா் தொகை, விதவை சான்று, வாரிசு சான்று, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, உள்பட பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்க கோரி வருவாய் துறை அலுவலா்களிடம் விண்ணப்பம் வழங்கினா்.
மேலும், 243-க்கும் மேற்பட்டோா் தங்களது கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்களாக பிற துறை அலுவலா்களிடம் வழங்கினா். முகாமில், புதிய ரேஷன் அட்டை, பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றுகள் என, 10- க்கும் மேற்பட்டோருக்கு தீா்வு ஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமில் சந்திரவிலாசபுரம், கதன்நகரம், ஜனகராஜகுப்பம், ராகவநாயுடுகுப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.