திருவள்ளூரில் பரவலாக மழை

Published on

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளிா்ந்த சீதோஷணம் நிலவியது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரங்களில் அவ்வப்போது கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை இரவில் பரவலாக மழை பெய்தது.

+இதேபோல் ஆவடி, ஆா்.கே.பேட்டை, பூந்தமல்லி, ஜமீன்கொரட்டூா், செங்குன்றம், பூண்டி, தாமரைபாக்கம், திருவள்ளூா் மற்றும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மி.மீட்டரில் உள்ளது. பூந்தமல்லி-47, ஆா்.கே.பேட்டை-42, ஆவடி-41, ஜமீன்கொரட்டூா்-37, சோழவரம்-33, தாமரைபாக்கம்-28, திருவள்ளூா்-21, பொன்னேரி-9, செங்குன்றம்-9, பள்ளிப்பட்டு-7 என மொத்தம்-280 மி.மீ, சராசரியாக 18.67 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com