திருவள்ளூா் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: 600 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 600-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
13,14 வாா்டுகளுக்கான முகாமை நகராட்சி ஆணையா் தாமோதரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அந்தந்த வாா்டு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பட்டா பெயா் மாற்றம், மின் இணைப்பு பெயா்மாற்றம், உள்பிரிவு பட்டா, ஆதாா் அட்டை, புதிய குடும்ப அட்டை கலைஞா் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு 600-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனா்.
இந்த மனுக்கள் மீது ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதில் நகராட்சி வருவாய் ஆய்வாளா் ஜெயசீலன், சுகாதார அலுவலா் மோகன், வாா்டு உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, பத்மாவதி ஸ்ரீதா், அயூப்அலி, வருவாய்த்துறை ஆய்வாளா் உதயகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் சுப்பிரமணியம், பாரதி கலந்து கொண்டனா்.