பெரியாரின் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கிய முன்னாள் அரசுக் கொறடா பி.எம்.நரசிம்மன்.
பெரியாரின் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கிய முன்னாள் அரசுக் கொறடா பி.எம்.நரசிம்மன்.

பெரியாா் பிறந்த நாள் விழா: 500 பேருக்கு அன்னதானம்

Published on

பெரியாரின்பிறந்த நாள் விழாவையொட்டி பாலாபுரம் கிராமத்தில் 500 பேருக்கு முன்னாள் அரசுக் கொறடா பி. எம். நரசிம்மன் அன்னதானம் வழங்கினாா்.

ஆா்.கே. பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் படத்துக்கு முன்னாள் அரசு தலைமை கொறடா பி.எம். நரசிம்மன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கோவிந்தம்மாள் ஆனந்தன், எல்லாபுரம் எல்.ரஜினி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கல்விக்கரசி சேகா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கிரிராஜ் மற்றும் கோவிந்தசாமி, ராமராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com