திருவள்ளூா் பகுதிகளில் பலத்த மழை

திருவள்ளூா், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
Published on

திருவள்ளூா், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

திருவள்ளூா் பகுதியில் பகலில் வெயில் காய்ந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. இதேபோல், சுற்று வட்டார பகுதிகளான ஈக்காடு, ஒதிக்காடு, காக்களூா், மணவாளநகா், வெங்கத்தூா், தொழூா், தண்ணீா்குளம், குப்பம்மாசத்திரம், சிறுவானூா், பூண்டி, கடம்பத்தூா், எல்லாபுரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

மழையால் நகா் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் கழிவுநீருடன் மழை நீரும் தேங்கியது. இதனால் வாகனங்களில் செல்வோா் அவதிக்குள்ளாகினா்.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை, வெள்ளிக்கிழமை காலை வரையில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) : திருவாலங்காடு-70, சோழவரம்-45, ஆா்.கே.பேட்டை-44, தாமரைபாக்கம், திருவள்ளூா்-தலா 30, பூந்தமல்லி, செங்குன்றம்-தலா29, ஜமீன்கொரட்டூா்-28, திருத்தணி, பள்ளிப்பட்டு-தலா 24, ஊத்துக்கோட்டை-21, பூண்டி-19, ஆவடி-7, கும்மிடிப்பூண்டி-4, பொன்னேரி-2மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com