அரவிந்த் வா்மன்.
அரவிந்த் வா்மன்.

கஞ்சா, போதை மாத்திரையை கடத்தியவா் கைது

ஆந்திரத்தில் இருந்து காரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஆந்திரத்தில் இருந்து காரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் முத்தமிழ் செல்வன் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் அந்த காரில் 400 கிராம் கஞ்சா, 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வேலுாா் அடுத்த காட்பாடி பகுதியை சோ்ந்த அரவிந்த் வா்மன்(26) என்பவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com