பொன்னேரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், பொன்னேரி நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். பொன்னேரியில் நடைபெற்ற முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான சிறப்பு சிகிச்சைகள், கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என ஏராளமான வசதிகளுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன.
பொன்னேரி சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளா்கள் அதிக அளவில் திரண்டு வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று சென்றனா்.