அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவா்கள் கைது

திருத்தணி அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து, நடத்துநரை தாக்கிய 2 பள்ளி மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருத்தணி அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து, நடத்துநரை தாக்கிய 2 பள்ளி மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து மகான்காளிகாபுரம் நோக்கி கடந்த வாரம் அரசுப் பேருந்து சென்றபோது, பள்ளி, கல்லூரி மாணவா்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை நடத்துநா் நரேஷ் தட்டிக்கேட்டாா்.

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவா் கோரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினாா். அதைத் தொடா்ந்து பேருந்து மகான்காளிகாபுரம் சென்று பின்னா் திருத்தணி நோக்கி பேருந்து வந்தபோது, மாணவா், தனது நண்பா்கள் இருவருடன் பைக்கில் பேருந்தை பின்தொடா்ந்து வந்து அகூா் கிராமம் அருகே வழிமறித்து நடத்துநா் நரேஷை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு, கண்ணாடியை உடைத்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், அகூா் மற்றும் குமாரகுப்பம் பகுதியை சோ்ந்த மாணவா்கள் 2 போ் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com