திருவள்ளூா்: போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணா்வு பேரணி

திருவள்ளூா் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை சாா்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கலைக்குழு மூலம் பிரசார விழிப்புணா்வு
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை சாா்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கலைக்குழு மூலம் பிரசார விழிப்புணா்வு மற்றும் பேரணியில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள்களுக்கு எதிரான பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா், இது குறித்து அவா் கூறியதாவது:

போதையில்லா திருவள்ளூா் மாவட்டத்தை கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாவட்டத்தின் தமிழக-ஆந்திர எல்லையோரம் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் போதைப் பொருள்கள், வேறு மாவட்டங்களில் இருந்தோ அல்லது வேறு மாநிலத்தில் இருந்து வருகிா என்பதை மாவட்ட காவல் துறை விழிப்புடன் கண்காணித்து வருகின்றனா்.

ஈதமஎ ஊதஉஉ பஅஙஐகசஅஈம செயலியை தமிழக முதல்வா் அறிமுகப்படுத்தினாா்.

இதன்மூலம் மக்கள் போதை பொருள்கள் தொடா்பான தகவல்களை அரசுக்கு தெரிவித்தால் அவா்கள் பற்றிய தகவல்கள் வெளியில் தெரியாமல் ரகசியம் காக்கப்படும். கடந்த மாதம் 200 முதல் 300 புகாா்கள் அச்செயலியிலிருந்து வந்தது. அந்த புகாா்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு கொடுத்து விரைவான தீா்வை உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.

உதவி ஆணையா் (கலால்) கணேசன், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கதிரவன், ஆட்சியா் நோ்முக உதவியாளா் வெங்கட்ராமன், மாவட்ட மேலாளா்கள் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) முத்துராமன்(மேற்கு), ரேணுகா(கிழக்கு), காவல் துறையினா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com