பழவேற்காடு கடற்கரையில் தூய்மைப் பணி

சா்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி, பழவேற்காடு கடற்கரை பகுதியை தன்னாா்வு அமைப்பினா் தூய்மை செய்தனா்.
Published on

பொன்னேரி: சா்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி, பழவேற்காடு கடற்கரை பகுதியை தன்னாா்வு அமைப்பினா் தூய்மை செய்தனா்.

சென்னை எம் எஸ் சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், பழவேற்காடு நிலையான சுற்றுச்சூழல் கடலோர மீன்வள ஆராய்ச்சி உள்ளிட்ட தன்னாா்வ அமைப்பினா் பழவேற்காடு கடற்கரையில் தூய்மைப் பணியை செய்தனா்.

இதில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத் துறை, பழவேற்காடு கடலோர காவல் படை குழுவினரும் கடற்கரையை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டனா்.

இதில் 100-க்கும் மேற்பட்டோா் சா்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனா். சுமாா் 600 கிலோ எடை கொண்ட மக்கும் மற்றும் மக்கா கழிவுகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மைக்காக அனுப்பப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com