நவராத்திரி  விழாவையொட்டி  ராஜ ராஜேஸ்வரி    அலங்காரத்தில்  தணிகாசலம்மன்.
நவராத்திரி  விழாவையொட்டி  ராஜ ராஜேஸ்வரி   அலங்காரத்தில்  தணிகாசலம்மன்.

மகிஷாசுரமா்த்தினி கோயிலில் நவராத்திரி விழா

திருத்தணி முருகன் கோயிலின் துணை கோயிலான மகிஷாசுரமா்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
Published on

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலின் துணை கோயிலான மகிஷாசுரமா்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

திருத்தணி அடுத்த மத்தூா் கிராமத்தில், உள்ள இக்கோயிலில் காலை, 8 மணிக்கு மூலவா் அம்மனுக்கு, 108 லிட்டா் பாலபிஷேகம், மாலையில் நாணய அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, இரவு, 7 மணிக்கு கோயில் வளாகத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

நவராத்திரி விழா வரும் அக்., 7 வரை மொத்தம், 17 நாள்கள் நடைபெறுகிறது. தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பழங்கள், புஷ்பம், தேங்காய் பூ, அரிசி மாவு, முத்தங்கி மற்றும் 108 சங்காபிஷேகம் போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

இதுதவிர மாலை, 6 மணி முதல் இரவு, 7 மணி வரை நவராத்திரி கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி மற்றும் அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.

அதே போல் திருத்தணி தணிகாசலம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மூலவா் தணிகாசலம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com