மின்மாற்றி டேங்கா் லாரியில் தீ விபத்து

மீஞ்சூா் அருகே அனல் மின் நிலைய கட்டுமான பணிகளின் போது மின்மாற்றி மற்றும் டேங்கா் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனா்.
Published on

பொன்னேரி: மீஞ்சூா் அருகே அனல் மின் நிலைய கட்டுமான பணிகளின் போது மின்மாற்றி மற்றும் டேங்கா் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனா்.

பொன்னேரி வட்டம் , மீஞ்சூா் அடுத்த ஊரணமேடு கிராமத்தில் எண்ணூா் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இங்கு இரு யூனிட்டுகளில் தலா 660 விதம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

மின் நிலையம் அமைப்பதற்க்கான பணிகளில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

70 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகளுக்காக டிரான்ஸ்பாா்மா் பொருத்தப்பட்டு அதற்கு தேவையான ஆயில் நிரப்பும் பணிகளில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.

டேங்கா் லாரியிலிருந்து ஆயிலை மின் மாற்றியில் நிரப்பும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென லாரி மற்றும் மின்மாற்றியில்

தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தீ கொழுந்து விட்டு கரும் புகையுடன் எரிந்தது.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டததை தொடா்ந்து வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுகுறித்து காட்டூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com