அரசு ஐடிஐ-களில் சேர செப். 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டில் சேர செப். 30-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டில் சேர செப். 30-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2025-ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பமானது ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை செப். 30-க்குள் பதிவு செய்யலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அம்பத்தூா் (ஆடவா் மற்றும் மகளிா்) மற்றும் வடகரை, திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய 5 சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சேர எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 50 விண்ணப்பதாரா் செலுத்தலாம்.

இணையதளம் மூலம் மேற்குறிப்பிட்ட நாளுக்குள் கலந்தாய்வு மதிப்பெண் பேரில் நடைபெறும் அதன் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com