நாளை இலவச கண், பொது மருத்துவ முகாம்

பொன்னேரியில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது.
Published on

பொன்னேரியில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது.

பொன்னேரி அருட்பிரகாச வள்ளலாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞானசபை மற்றும் சென்னை ஏ.சி.எஸ் மருத்துவகல்லுரி இணைந்து இம்முகாமை நடத்துகின்றனா்.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வள்ளலாா் சமரச சுத்தசன்மாா்க்க வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

முகாமில் தூரப்பாா்வை, கிட்டப் பாா்வை உள்ளிட்ட கண் மற்றும் தோல், எலும்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

X
Dinamani
www.dinamani.com