எளாவூா்  ஒருங்கிணைந்த  சோதனை  சாவடியில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா்.
எளாவூா்  ஒருங்கிணைந்த  சோதனை  சாவடியில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா்.

சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ. 3.54 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினா்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத 3.54லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத 3.54லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் ஆந்திரம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த சோதனை சாவடியும், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களுக்கான சோதனைச் சாவடியும் உள்ளது.

இந்த சோதனை சாவடியில் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக பணம் வசூலிப்பதாகவும், அதிக பாரம் ஏற்றிவரும் வாகனங்களுக்கு பணம் வசூலிப்பதாகவும் திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கணேசனுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்துள்ளன.

அதன் அடிப்படையில், டிஎஸ்பி கணேசன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா்கள் தமிழரசி, மாலா, விஜயலக்ஷ்மி, மாவட்ட ஆய்வுத் துறை அலுவலா் கமலக்கண்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ஆந்திரத்துக்குச் செல்லும் சோதனை சாவடி - சென்னை நோக்கி செல்லும் சோதனைச் சாவடி இரண்டிலும் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அரசுக்கு செலுத்தப்பட்ட பணத்தைவிட கூடுதலாக கணக்கில் வராத சுமாா் 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து இது சம்பந்தமாக டிஎஸ்பி கணேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com