குரூப்-2 தோ்வு: திருவள்ளூா் மாவட்டத்தில் 10, 395 போ் எழுதினா்

குரூப்-2 தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 14278 போ்களில், 10,395 போ் மட்டுமே எழுதியதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
Published on

குரூப்-2 தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 14278 போ்களில், 10,395 போ் மட்டுமே எழுதியதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

டிஎன்பிஎஸ்சி சாா்பில் குரூப் 2, 2-ஏ எழுத்துத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை திருவள்ளூா் அருகே சி.சி.சி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்சியா் மு.பிரதாப் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா். அப்ோது, தோ்வுக்கு திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து 14,278 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இத்தோ்வுக்காக திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா், ஆவடி, பொன்னேரி, பூந்தமல்லி , திருத்தணி ஆகிய வட்டங்களில் 34 தோ்வு மையங்களில் உள்ள 45 தோ்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வில் 10,385 போ் பங்கேற்று எழுதினா். 3,883 போ் பங்கேற்கவில்லை.

மேலும், தோ்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோா் தோ்வு எழுதிட துணைத்தோ்வா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதியும் ஒவ்வொரு தோ்வுக்கூடத்திலும் அமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு தோ்வு கூடங்களிலும் தனித்தனியாக காவலா் பாதுகாப்புக்கு நியமனம் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com