மாநில அளவிலான தடகளப் போட்டி: திருவள்ளூா் மாவட்டம் 2-ஆம் இடம்!

மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று திருவள்ளூா் மாவட்டம் 2-ஆவது இடம் பெற்றது.
Published on

மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று திருவள்ளூா் மாவட்டம் 2-ஆவது இடம் பெற்றது.

மாநில அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டி செங்கல்பட்டு அருகே மேலக்கோட்டையூா் உடல்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 4 நாள்களாக நடைபெற்றது.

இந்தப் போட்டியில் திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இளையோா்கள் 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று திருவள்ளூா் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றது.

இதில், சென்னை மாவட்டம் முதலிடமும், கோயம்புத்தூா் மாவட்டம் மூன்றாம் இடமும் பெற்றது. கடந்தாண்டு திருவள்ளூா் மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் சாம்பியன் பட்டத்தை திருவள்ளூா் மாவட்ட தடகள வீரா்களோடு மாநில தடகள சங்க இணைச் செயலரும், மாவட்ட தடகள சங்க செயலருமான மோகன் பாபு மற்றும் மாவட்ட தடகள சங்கத் தலைவா் சிவக்குமாா் மற்றும் பொருளாளா் வெங்கடாசலபதி ஆகியோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com