
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில், பல்வேறு அம்மன் வடிவங்களில் மாணவியா் வேடமிட்டு நடனம் ஆடினா்.
திருத்தணி முருகன் மலைக் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலையில் உற்சவா் கஜவள்ளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா். அப்போது, கஜவள்ளியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. மேலும் பரத நாட்டியம், ஆன்மிக பொற்பொழிவு மற்றும் இசை பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திங்கள்கிழமை மாலை கஜவள்ளி அம்மன், அன்ன வாகனத்தில் எழுந்தருளினாா்.
தொடா்ந்து, தனியாா் பள்ளி மாணவியா் 9 போ் பல்வேறு அம்மன் வேடங்கள் அணிந்து பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு நடனம் ஆடினா். இதை திரளான பக்தா்கள் கண்டு ரசித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.