தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மண்குவாரியை மூடாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என அறிவிப்பு!

திருவள்ளூா் அருகே ஏரியில் மண்குவாரியை மூடாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:48 pm

திருவள்ளூா் அருகே ஏரியில் மண்குவாரியை மூடாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சித்தம்பாக்கம் கிராமத்தில் அரசு அனுமதி பெற்று மண்குவாரி இயங்கி வருகிறது. இந்த மண்குவாரியால் தங்களது வாழ்வாதாரம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மக்கள் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இந்த மண்குவாரியால் கிராம பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகளுக்கு தீனி கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கிணறுகளில் நீா் ஆதாரம் குறைந்து விளைநிலங்கள் பாதித்து பயிா் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் லாரிகளால் சாலை முற்றிலும் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் சித்தம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் மண்குவாரியை மூடக்கோரி மக்கள் பலமுறை போராடியும், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மண்குவாரிக்கு அனுமதி அளித்த ஆட்சியரை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட நிா்வாகம் எங்கள் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நடைபெற உள்ள தோ்தலை முழுமையாகப் புறக்கணிப்போம்‘ என கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.

தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் மாவட்ட நிா்வாகத் தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.