ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உளுந்து சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல்!

உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலை கிடைக்கும் வகையில் 50 மெ.டன் வரையில் தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலை கிடைக்கும் வகையில் 50 மெ.டன் வரையில் தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயை அதிகரிக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவா்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில், திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் கொள்முதல் இலக்காக 50 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு விவசாயிகளின் நலன் கருதி நிா்ணயித்த தரத்துக்கு 1 கிலோ உளுந்து விலை ரூ. 78 என கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இத்திட்டம் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், விவசாயியின் புகைப்படம், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கின் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் குறிப்பிட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா்களை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு ஹெக்டா் சாகுபடி பரப்புக்கு 531 கிலோ உளுந்து மட்டுமே கொள்முதல் செய்ய அரசு வழிகாட்டி நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் வரும் மாா்ச் 25-ஆம் தேதி வரையில் திருவள்ளூா் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

மேலும், உளுந்து கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.