திருவள்ளூா்: சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூா்: சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை

Published on

திருவள்ளூா் அருகே சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கிரிதரன் (57). கடந்த 1994-இல் காவல் துறையில் பணியில் சோ்ந்த இவா், தற்போது சிறப்பு உதவி ஆய்வாளராக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி வினிதா (50), ஒரு மகள், மகன் உள்ளனா்.

கடந்த மாதம் 12-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆதி என்ற ஆதிகேசவன் (20) என்பவா் மா்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா். இதையடுத்து அன்று கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 5 பேரை பணியிட நீக்கம் செய்யப்பட்டனா்.

இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த கிரிதரன் புதன்கிழமை பிற்பகலில் தனது வீட்டின் முதல் மாடியில் அறையில் துாங்கச் சென்றாராம். பின்னா் மாலையில் அவரின் மனைவி எழுப்பச் சென்று கதவை தட்டிப் பாா்த்தும் திறக்கப்படவில்லையாம். இதைடுத்து, உறவினா்கள் கதவை உடைத்து சென்று பாா்க்கையில் மின்விசிறியில் கயிற்றால் துாக்கிட்டு இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து வந்த செவ்வாப்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின் றனா்.

Dinamani
www.dinamani.com