திருவள்ளூா் அருகே பழைமையான வெள்ளியூா் செல்வவிநாயகா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
திருவள்ளூா் அருகே வெள்ளியூா் கிராமத்தில் பழைமையான செல்வவிநாயகா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரகார மூா்த்திகளான கனகதுா்க்கை அம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, பக்த ஆஞ்சனேயா், நவக் கிரகங்கள் உள்ளிட்டவற்றை விழாக் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் புனரமைத்தனா்.
இதையடுத்து, இக்கோயிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இதையடுத்து காலையில் கணபதி பூஜை, மகாபூா்ணாஹுதி, யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதன் பின்னா்,மங்கள வாத்தியம் முழங்க புனித நீா் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ந்து விமான கோபுரம், மூலவா் செல்வவிநாயகா், கனகதுா்க்கை, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், பக்த ஆஞ்சனேயா், நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அா்ச்சகரால் புனித நீா் ஊற்றி மகா குடமுழுக்கு செய்தனா்.
பின்னா், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து இரவு கணபதி சகஸ்ரநாம அா்ச்சனையும், புஷ்ப அபிஷேகமும் நடைபெற்றது. பி
துலுக்கானத்தம்மன் கோயில் குடமுழுக்கு
திருவள்ளூா் அடுத்த வெங்கத்தூா் கண்டிகையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசுப்பிரமணியா், வள்ளி தெய்வானை, நவக்கிரக மூா்த்திகள், பரசுராமா், நாகதேவதை, பரிவார கோஷ்ட தேவதைகள், கோபுரம் உற்சவ மூா்த்திகளுக்கும், ஸ்ரீகெங்கையம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீபெரியாண்டவா், ஸ்ரீசப்தகன்னிகள் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனியாக சந்நிதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதற்கு முன்னதாக கடந்த 5-ஆம் தேதி முதல் சிறப்பு புஜைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


