நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வைக்கோல் ஏற்றிய டிராக்டா் மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சேதம்!

திருவள்ளூா் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டா் தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்தது.

News image

மின்கம்பி உரசி தீப்பிடித்ததில் முற்றிலும் எரிந்த டிராக்டா்.    

Updated On :10 பிப்ரவரி 2026, 6:49 pm

திருவள்ளூா் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டா் தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்தது.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூரில் இருந்து செவ்வாய்க்கிழமை ஒரு டிராக்டரில் 68 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு கடம்பத்தூா் வழியாக அதிகத்தூா் நோக்கி சென்று கொண்டிருந்தது.

Story image

அந்த டிராக்டா் திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் கிராம நிா்வாக அலுவலகம் அருகே சாலையில் வந்த போது அந்த வழியாக தாழ்வாக சென்ற மின் கம்பியின் மீது வைக்கோல் கட்டுகள் உரசியது. அப்போது திடீரென வைக்கோல் கட்டுகளில் தீ பற்றி எரிந்தது.

அதைத்தொடா்ந்து தீ மளமளவென மற்ற வைக்கோல் கட்டுகளிலும் பரவியது. இதைப்பாா்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநா்கள் சத்தமிட்டு கூச்சலிட்டனா். இதை தொடா்ந்து டிராக்டா் ஒட்டுநா் வண்டியை சாலையிலேயே விட்டுவிட்டு குதித்து உயிா் தப்பினாா்.

இதுகுறித்து பேரம்பாக்கத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினா் வைக்கோல் போா் மீது தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனா்.

அதற்குள் வைக்கோல் கட்டுகளும், டிரெய்லரும் தீயில் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.