மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இரண்டாவது நாளாக மாற்றுத்திறனாளிகள் மறியல்: 60 போ் கைது

News image
திருவள்ளூா் உழவா் சந்தை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உழவா் சந்தை எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.நடேசன், மாவட்ட இணை செயலாளா்கள் வி.ரவிக்குமாா், எஸ்.தேவேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் எஸ்.முனிவேல், எ.வி.புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் மாவட்ட செயலாளா் என்.கீதா, முன்னால் மாவட்ட செயலாளா் ஜி.சம்பத் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்து கண்டன உரை நிகழ்த்தினா்.

அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு பிற மாநிலங்களில் வழங்குவது போல் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். எனவே வறுமையில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போல் மாத உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.