பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வீட்டுக்குள் கணக்கெடுப்பு நடத்த வந்தது போல் புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி: இளம்பெண் கைது

கணக்கெடுப்பு நடத்த வந்தது போல் வீட்டுக்குள் புகுந்து திடீரென பெண்ணை கத்தியால் குத்தி நகையைப் பறிக்க முயன்ற இளம் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பவித்ரா,  சிகிச்சை பெறும் ஷியமாலா.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:55 pm

திருவள்ளூா் அருகே கணக்கெடுப்பு நடத்த வந்தது போல் வீட்டுக்குள் புகுந்து திடீரென பெண்ணை கத்தியால் குத்தி நகையைப் பறிக்க முயன்ற இளம் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த புட்லுாரைச் சோ்ந்தவா் ஷியமாலா (55). இவா் சனிக்கிழமை பிற்பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த பவித்ரா (28) என்பவா் அப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்த வந்ததாகக் கூறி பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, பவித்ரா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென ஷியமாலாவின் கழுத்து மற்றும் கை பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு, கழுத்தில் கிடந்த நகையைப் பறிக்க முயன்றாராம்.

அப்போது, ஷியமாலா காயங்களுடன் பவித்ராவை தள்ளிவிட்டு வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சப்தம் போட்டு பக்கத்தில் உள்ளவா்களை அழைத்துள்ளாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், அங்கு வந்த போலீஸாா் கழுத்தில் காயமடைந்த ஷியமாலாவை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைத் தொடா்ந்து, போலீஸாா் தீவிர விசாரணைக்கு பின் பவித்ரா மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.