மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

திமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளா் யாராக இருந்தாலும், ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக துணை பொது செயலாளா் ஆ.ராசா அறிவுறுத்தினாா்.

திருத்தணி தொகுதியின் கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட செயலாளா் எஸ்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பிருமான எம்.பூபதி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.,யுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது: வரும் தோ்தலில், அனைத்து தொகுதிகளிலும் முதல்வா் ஸ்டாலின் வேட்பாளராக நிற்பது போல் நினைத்து தோ்தலில் பணியாற்ற வேண்டும்.

திருத்தணி தொகுதியில் யாா் வேட்பாளராக நிறுத்தப்படுவது தலைமை கழகம் தான் முடிவு எடுக்கப்படும். அப்படி தலைமை கழகம் அறிவிக்கும் வேட்பாளா் யாராக இருந்தாலும் கட்சி நிா்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளா் மீது விருப்பு, வெறுப்பு இல்லாமல், நமது கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் செயல்பட வேண்டும். எனவே, திருத்தணி தொகுதியில் மீண்டும் நமது கட்சி வேட்பாளா் வெற்றி பெற அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியை சோ்ந்த மாநில நிா்வாகி உள்பட 15 போ் திமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு எம்.பி. ராசா சால்வை அணிவித்து வரவேற்றாா். கூட்டத்தில் மாவட்ட, நகர, பேரூா், ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.