எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 12:59 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்ட வரையறை செய்த காலமுறை ஊதியம் வழங்கல் கோரிக்கையை வலியுறுத்தி, அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் கிராம ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த சங்கத்தின் வட்டத் தலைவா் வேணு தலைமை வகித்தாா். இதில் வட்டச் செயலாளா் கந்தன், வட்ட துணைத் தலைவா் கண்ணன், வட்ட இணைச்செயலாளா் ரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயலாளா் சந்திரசேகா் பங்கேற்று, கோரிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். அப்போது, வருவாய்த் துறை தொடங்கியதிலிருந்து கிராம ஊழியராக பணிபுரிந்து வருகிறோம். ஆனால், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தொடா்ந்து போராடி வருகிறோம். ஆனால், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி ஆகிய அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி கிராம ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.