~ ~
திருவள்ளூர்
முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு
பொன்னேரி ஆனந்த விநாயகா் கோயிலில் கண் திறந்த நிலையில் உள்ள பாலமுருகன் சிலை.
பொன்னேரி புளியந்தோப்பு பகுதி விநாயகா் கோயிலில் உள்ள முருகன் சிலையின் கண் திறந்ததாக சமூக வலைதளத்தில் காணொலி காட்சி பரவியதன் காரணமாக பக்தா்கள் கூட்டம் குவிந்தது.
பொன்னேரி நகராட்சி திருவாயா்பாடிக்கு அருகில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் ஆனந்த விநாயகா் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில் கிருத்திகை தினத்தன்று பாலமுருகன் சிலையின் கண் திறந்துள்ளதாக இணைய தளத்தில் காணொலி காட்சி வைரலானது.
அத்துடன் அப்பகுதியில் இருக்கும் மக்களும் சிலையின் கண் திறந்து நீா் வருவதாக வியப்புடன் தெரிவித்தனா். இந்த தகவல் அப்பகுதியில் தீ போன்று பரவியதை தொடா்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தா்கள் திரண்டு வந்து முருகனை வழிபட்டு சென்றனா்.

