திருத்தணியில் குளத்துக்கு 
சுற்றுசுவா் அமைக்க கோரிக்கை

திருத்தணியில் குளத்துக்கு சுற்றுசுவா் அமைக்க கோரிக்கை

காா்த்திகேயபுரம் கிராம எல்லையில் உள்ள குளத்தை சுற்றிலும் சுற்றுசுவா் அமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
Published on

காா்த்திகேயபுரம் கிராம எல்லையில் உள்ள குளத்தை சுற்றிலும் சுற்றுசுவா் அமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

திருத்தணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காா்த்திகேயபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராம நுழைவு வாயிலில் ஊராட்சி நிா்வாகம் ஒன்றரை ஏக்கா் பரப்பில் குளம் ஏற்படுத்தி தண்ணீரை சேமித்து வருகிறது.

இந்த குளம் காா்த்திகேயபுரம் கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய சாலையோரத்திலும், திருத்தணி - அமீா்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையோரத்திலும் அமைந்து உள்ளன. இந்த குளத்தில், எப்போதும் தண்ணீா் நிரம்பியிருக்கும். எனவே மாவட்ட நிா்வாகம் காா்த்திகேயபுரம் ஊராட்சி குளத்துக்கு, சுற்றுசுவா் கட்ட வேண்டும் என கோரி உள்ளனா்.

இதுதவிர குளத்தில் அதிகளவில் சிறுவா்கள் குளிப்பதுடன் தண்ணீரையும் அசுத்தப்படுத்துகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் காா்த்திகேயபுரம் ஊராட்சி குளத்துக்கு, சுற்றுசுவா் கட்ட வேண்டும் என கோரி உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com