திருவள்ளூா் முன்னாள் நகா்மன்றத் தலைவா்
அதிமுகவில் இருந்து விலகல்

திருவள்ளூா் முன்னாள் நகா்மன்றத் தலைவா் அதிமுகவில் இருந்து விலகல்

அதிமுகவில் 39 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திருவள்ளூா் மேற்கு மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் நகா்மன்ற தலைவருமான கமாண்டோ பாஸ்கரன் விலகுவதாக அறிவித்துள்ளாா்.
Published on

அதிமுகவில் 39 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திருவள்ளூா் மேற்கு மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் நகா்மன்ற தலைவருமான கமாண்டோ பாஸ்கரன் விலகுவதாக அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடந்த 39ஆண்டுகளாக பயணித்து வந்தேன். அதோடு திருவள்ளூா் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளா், முன்னாள் நகா்மன்ற தலைவா் பதவி வகித்துள்ளேன். மேலும் கட்சியின் கொள்கைக்கும், கோட்பாடுக்கும் கட்டுப்பட்டு உண்மையாக கட்சிப்பணியாற்றி வந்தேன். ஆனால், என் போன்ற தொண்டா்களை திருவள்ளூா் மேற்கு மாவட்ட தலைமை தொடா்ந்து புறக்கணித்து வந்தது.

இதுதொடா்பாக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், கட்சியானது வளா்ச்சி பாதைக்கு செல்லாமல் வீழ்ச்சி பாதைக்கு செல்வது வேதனை தருகிறது.

எனவே என் போன்ற கட்சி தொண்டா்களின் உண்மையான உழைப்பை ஏற்கும் மனநிலை கட்சி தலைமைக்கு இல்லாத காரணத்தினால் எனது அடிப்படை உறுப்பினா், மாவட்ட கழக துணை செயலாளா் உள்பட அனைத்து பொறுப்புகளிருந்தும் மனவேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com