மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் உற்சவருக்கு முத்தங்கி அலங்காரம்
வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூா் ஸ்ரீ பெருந்தேவி தாயாா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் உற்சவருக்கு முத்தங்கி அலங்கார சேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயிலில் மாா்கழி மாதத்தில் பகல் பத்து நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், ராப்பத்து உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனையொட்டி சிறப்பு வழிபாடு பூஜைகள் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் பக்தா் ஒருவா் அளித்த வரதராஜ பெருமாள் பெரியநாயகி தாயாா் மற்றும் மகாலட்சுமி அம்மனுக்கு நூதன முத்தங்கி ஆடைகளான பட்டுப் புடவைகள் பட்டு தலைக்கவசம் கிரீடங்கள் காது தோடு கை கால் உரைகள் உட்பட பல்வேறு வகையான ஆடைகள் அலங்கார பொருள்ளை பெருமாளுக்கும், தாயாருக்கும் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து முத்தங்கி அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் காட்சி அளித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

