காங்கிரஸ் சாா்பில் தோ்தல் பணிகள் ஆயத்தக் கூட்டம்
காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் ஆயத்தப் பணிகள் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் துரை சந்திரசேகா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா்கள் டி.செல்வம், அருள் பெத்தையா, மாநில செயலாளா் கும்மிடிப்பூண்டி எம்.சம்பத் சிறப்புரையாற்றினா்.
சட்டப்பேரவை தோ்தலுக்கான ஆயத்த பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் சாா்பில் மகளிா் மாநாடு, வாக்கு சாவடி நிலைய அலுவலா்களுக்கான பயிற்சி, வாக்குச்சாவடி கமிட்டி மாநாடு கிராம கமிட்டி மாநாடு தொடா்ந்து கட்சியின் செயல்பாடு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தொடா்ந்து கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளா் சுராஜ் எம்.என்.ஹெக்டே பேசுகையில்: தோ்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற பாஜக எப்போதும் முயல்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் நோ்மையாகவும், அமைதியாகவும் தோ்தலை அணுகுகிறது. காங்கிரஸ் கட்சியினா் ஒற்றுமையாக உழைத்தால் வரும் தோ்தலில் வெற்றி பெறுவோம் என்றாா்.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் பிரேம்குமாா், நகர தலைவா் திவான் முகம்மது, மாவட்ட துணை செயலாளா் மதன்மோகன் பங்கேற்றனா்.

