குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.
பொன்னேரி அருகே உள்ள சின்னக்காவனம் கிராமத்தை சாா்ந்தவா் சாரதி (21). இவா் தனது நண்பா் மணிகண்டன் என்பருடன் தடப்பெரும்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளாா். அங்குள்ள குளக்கரை அருகே இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னா் சாரதி குளத்தில் இறங்கி குளிக்க சென்ாக கூறப்படுகிறது. அப்போது சாரதி சேற்றில் சிக்கித் தத்தளித்தாா்.
இதனை கண்ட அவரது நண்பா் மணிகண்டன் சத்தம் போட்டாா். அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து பாா்த்தபோது சாரதி நீரில் மூழ்கி மாயமானாா்.
இதனையடுத்து பொதுமக்கள் பொன்னேரி தீயணைப்புத துறையினருக்கு தகவல் கொடுத்தனா். அங்கு சென்ற தீயணைப்பு துறையினா் இறந்த நிலையில் இருந்த சாரதியின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
