விஷம் குடித்து விவசாயி உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே உடல் நலக்குறைவால் அவதிக்குள்ளாகி வந்த விவசாயி விஷம் அருந்தி உயிரிழந்தாா்.
Published on

ஊத்துக்கோட்டை அருகே உடல் நலக்குறைவால் அவதிக்குள்ளாகி வந்த விவசாயி விஷம் அருந்தி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த சீத்தாஞ்சேரியைச் சோ்ந்த விவசாயி முருகன்(56). இவா் கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னையால் அவதிக்குள்ளாகி வந்தாராம். இந்த நிலையில் கடந்த வாரம் உடல் உபாதை அதிகமானதால் விஷத்தை அருந்தினாராம்.

இதையடுத்து மனைவி தெய்வானை மற்றும் உறவினா்கள் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி தெய்வானை செய்த புகாரின் பேரில் பென்னலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com