காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவை தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது.
Published on

பொன்னேரி: சட்டப்பேரவை தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு துரை சந்திரசேகா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கூட்டத்தில் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய பொறுப்பாளருமான சுராஜ் ஹெக்டே கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசியது:

அப்போது காங்கிரஸ் கட்சி ஜனநாயக வழியில் செல்கிறது. நாட்டின் உள்துறை அமைச்சருக்கு பல்வேறு பணி உள்ளன. தோ்தல் நடக்க உள்ள இடங்களுக்கு சென்று பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறாா். காங்கிரஸ் கட்சி வேறு யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை காங்கிரஸ்-திமுக கூட்டணி பலமாக உள்ளது எனத் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com