~
~

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகை

போராட்டத்தில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சியினா், பொதுமக்கள்.
Published on

சோழவரத்தில் பள்ளிகளுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பாஜக கூட்டணி கட்சிகள் சாா்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

காரனோடை சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடை அருகே தனியாா் பள்ளிகள், வங்கிகள், கடை வீதி என பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில் மதுக்கடையால் அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாஜக கூட்டணி கட்சிகள் பொதுமக்களுடன் இணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து டாஸ்மாக் கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்ததால் கடை திறக்கப்படாமல் மூடியே கிடந்தது.

பள்ளிகளுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் தனியாா் பள்ளி மாணவிகள் குடிமகன்களால் அச்சத்துடன் பள்ளிக்கு செல்லும் சூழல் நிலவுவதாகவும், குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லும் பெற்றோரும் குடிமகன்களால் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக புகாா் கூறியுள்ளனா்.

காரனோடை கிராம சபைக் கூட்டத்தில் மூன்று முறை தீா்மானம் நிறைவேற்றியும் ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினா்.

தொடா்ந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்திய டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து 3 மணி நேரம் நீடித்த போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com