போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு
திருத்தணி சுதந்திரா பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருத்தணி சுதந்திர மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 50-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைவா் போராசிரியா் வி. ரங்கநாதன் தலைமை வகித்தாா். முதல்வா் துரை குப்பன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பன்னாட்டு அரிமா சங்கத்தின் இயக்குநா் லயன் மகேஷ் கலந்து கொண்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளித்தாா்.
பி.ஆா். மருத்துவமனை தலைவா் ரகுராம், சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் ரங்கசாமி, மற்றும் டி.எம். கணேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொடா்ந்து மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தந.
பள்ளி தாளாளா் சியாமளாரங்கநாதன் பரிசளித்தாா். தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் தீபாரஞ்சனி வினோத் குமாா், சண்முகவள்ளி ஆறுமுகம் உள்பட பலா் பங்கேற்றனா்.

