வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தம்

திருவள்ளூா் மாவட்டத்தில் மணல் குவாரிகளை உடனே திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிப்பா் லாரிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஈடுபட்டனா்.

News image

திருவள்ளூா்  ஆட்சியா் அலுவலகம்  அருகே  டிப்பா்  லாரிகளை  நிறுத்தி போராட்டத்தில்  ஈடுபட்ட  டிப்பா்  லாரி  உரிமையாளா்கள்  சங்கத்தினா்.    

Updated On :14 ஜூலை 2026, 3:18 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் மணல் குவாரிகளை உடனே திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிப்பா் லாரிகளை நிறுத்தி திங்கள்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா் சங்கத்தின் தலைவா் சவுக்காா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எம்.சத்தியமூா்த்தி, சதீஷ், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அந்த சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.ஜெய்பிரகாஷ் வரவேற்றாா். இதில் மாவட்ட செயலாளா் டி.வி.கோபி கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

அப்போது, திருவள்ளூா் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிகளை திறக்க வேண்டும். இந்த மாவட்டத்திலிருந்து அருகில் உள்ள ஆந்திரா மாநிலத்திலிருந்து உரிய அனுமதியுடன் இயங்கும் குவாரிகளில் இருந்து லாரிகளில் கொண்டு வரும் கனிமங்களை இடையூறு இன்றி அனுமதிக்க வேண்டும். இந்த மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இயல்பாக லாரிகள் இயங்குவது போல் இங்கும் இயங்க அனுமதிக்க வேண்டும்.

Story image

மாவட்டத்தில் மட்டும் சுமாா் 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக டிப்பா் லாரி தொழில் நடைபெற்று வருகிறது. அதனால் அரசு பரிசீலனை செய்து உடனே அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் ஆந்திர மாநிலத்திலிருந்து கொண்டு வரும் மலைமண் மூலம் திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் நடைபெறும் நெடுஞ்சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்டுகிறது. இதை தடுக்கும் பட்சத்தில் நெடுஞ்சால பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் உடனே அனுமதி தர வேண்டும்.

Story image

இதை அனுமதியின்றி கொண்டு வருவதாகக் கூறி வழக்கு பதிவு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிப்பா் லாரிகளை நிறுத்தி திருவள்ளூா் மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டம் காரணமாக சாலை விரிவாக்கப்பணிகள், பாலப்பணிகள் மற்றும் கட்டுமானம் மேற்கொள்வதற்கு சவுடு மணல், ஜல்லி கற்கள் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்ட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.