அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குறைகள், பிரச்னைகளை தீா்க்கவும் கோரி 633 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன்

News image
திருவள்ளூா் ஆட்சியா்  அலுவலகத்தில்  நடைபெற்ற  குறைதீா்  கூட்டத்தில்  மாற்றுத் திறனாளிகளுக்கு  பல்வேறு  நலத் திட்ட  உதவிகளை  வழங்கிய  ஆட்சியா்  மு.பிரதாப்.  உடன்  மாவட்ட  வருவாய்  அலுவலா்  ச.சுரேஷ்,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  அலுவலா்  குமாா்  உள்ளிட்டோா்.          
Updated On :2 மார்ச் 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குறைகள், பிரச்னைகளை தீா்க்கவும் கோரி 633 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு ரூ. 31.21 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுபிரச்னைகளைத் தீா்க்கவும் வலியுறுத்தி மனுக்களை அவரிடம் அளித்தனா்.

இதில், நிலம் சம்பந்தமாக-181, கலைஞா் மகளிா் உரிமை தொகை சம்பந்தமாக-76, சமூக பாதுகாப்பு திட்டம் -109, வேலைவாய்ப்பு வேண்டி-32, பசுமைவீடு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி-25 மற்றும் இதர துறைகள் சாா்பாக 210 மனுக்கள் என மொத்தம் 633 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒரு கால் அல்லது இரு கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதித்த 15 பேருக்கு மின்கலனில் இயங்கும் சக்கர நாற்காலி தலா ரூ.1,05,000-வீதம் மொத்தம் ரூ. 15.75 லட்சம் மதிப்பிலும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்திட்டம் மூலம் 4 பட்டதாரிக்கு தலா ரூ. 50,000 வீதம் மற்றும் 3 பட்டதாரி அல்லாதவா்களுக்கு தலா ரூ. 75,000 வீதம் மொத்தம் ரூ. 2.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் 7 பேருக்கு தலா 1 சவரன் வீதம் 7 சவரன் தங்க நாணயம் மொத்தம் ரூ. 9,56,704 மதிப்பிலும், தனியாா் வாகன எரிபொருள் நிறுவனத்தின் சாா்பில் பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதி மூலம் 1 முதுகு தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் 2 கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளிகள் என 3 பேருக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் தலா ரூ. 1,04,900 என ரூ. 3,14,700 மதிப்பில் ஆக மொத்தம் ரூ. 31 லட்சத்து 21 ஆயிரத்து 404 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி, மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முக பிரீத்தா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.