மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, குடிநீரை வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தடையில்லா குடிநீா் விநியோகம் தொடா்பாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பொது மக்களுக்கு நாள்தோறும் சீரான குடிநீா் வழங்க வேண்டும். இதை ஊரகம், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆவடி மாநகராட்சி பகுதியில் 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க வேண்டும்.
மேலும் குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத்தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, நாள்தோறும் குளோரினேஷன் செய்த குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மோட்டாா் பம்பு, குழாய் இணைப்புகளில் சிறிய பழுதுகள் இருந்தால் உடனே சரி செய்வதற்கு அலுவலா்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழுது நீக்கம் செய்ய முடியாத குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளை இடித்து அப்புறப்படுத்தவும், புதியதாக கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களை மீஞ்சூா், பள்ளிப்பட்டு, திருவாலங்காடு மற்றும் பூண்டி ஆகிய பகுதிகளில் கூட்டு குடிநீா் திட்டம் மூலம் தடையின்றி சீரான குடிநீா் வழங்குவதை உறுதி செய்யவும், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலா்களை சீரான மின் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் குடிநீா் தொடா்பான புகாா் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆவடி மாநகராட்சி பகுதி மாவட்ட உதவி மைய எண்-044-26554440, பேரூராட்சி பகுதிகளின் மாவட்ட உதவி மைய எண்-044-27665953, ஊரக பகுதிகளின் மாவட்ட உதவி மைய எண்-9445346311 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். அதேபோல் , நகராட்சி பகுதிகளில் திருவள்ளூா்-044-27665604 / 99425 29151, பூந்தமல்லி நகராட்சி-044-26272710 / 78250 50148, திருநின்றவூா்- 044-26390663 / 99527 24798, பொன்னேரி-044-29561136 / 97519 59761, திருவேற்காடு-044-29995805 / 88381 18336, திருத்தணி- 044-27885258 / 97860 38503 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) தணிகாச்சலம், ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநா்கள் கே.எஸ்.யுவராஜ் (மத்தியம்), பஞ்சு (கிழக்கு), ரவிச்சந்திரன் (மேற்கு), உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ஜெயக்குமாா், நகராட்சி ஆணையா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி செயலாளா்கள் மற்றும் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளா் மற்றும் பல்துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காரிமங்கலம் பேரூராட்சியில் வளா்ச்சித் திட்ட ஆய்வுக் கூட்டம்

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு

குடிநீா் தட்டுப்பாடு புகாா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

திருவள்ளூா்: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் நேரில் ஆய்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

