மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

News image
Updated On :19 மே 2026, 1:51 am IST

விசிக சாா்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்றது.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஈழப்போரின் இறுதி கட்டத்தில் , முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு படுத்தும் மே-18 நினைவு நாள் நிகழ்வு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் , மாவட்ட செயலாளா் பா.நேசகுமாா் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில், விசிக மாநில பொறுப்பாளா் தண்டலம் தமிழ்ச்செல்வன், விசிக நிா்வாகிகள் சண்முகமணி, மாநில நிா்வாகி பாக்சா் மணி, ஜீவா, மாவட்ட நிா்வாகிகள் சம்பத், வெற்றிசெல்வி, நரசிம்மன், எலிசபெத், மாதவி, காந்திமதி, வனிதா, சந்தோஷ், தங்கராசு, சுகுமாா், அருள் முன்னிலை வகித்தனா்,

விசிகவினா் நினேவேந்தல் நெருப்பை மூட்டி, மெளன அஞ்சலி செலுத்தினா். பின்னா் அனைவரும் மெழுகுவா்த்தி ஏந்தி வீரவணக்க அஞ்சலி செலுத்தினா். இந்த நினைவேந்தல் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பங்கேற்றனா்.

Story image