9 அடி மலைப்பாம்பு மீட்பு
திருத்தணிஅருந்ததி காலனியில் பதுங்கியிருந்த, 9 அடி மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

திருத்தணி ஒன்றியம், சிறுகுமி ஊராட்சிக்குப்பட்டது பாகவாதபுரம் அருந்ததி காலனி. இங்கு, 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் அருந்ததி காலனியில் வீடுகள் இடையே, 9 அடி மலைப்பாம்பு இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
தொடா்ந்து திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி பாம்பை பிடித்தனா். தொடா்ந்து, மலைப்பாம்பை பாதுகாப்புடன் சிறுகுமி அருகே வனப்பகுதியில் விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.