பைக் - காா் மோதல்: ஒருவர் பலி!
திருவள்ளூா் அருகே காா் -இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன தொழிலாளி உயிரிழந்தாா்.
பலி! - சித்திரிப்புப் படம்
திருவள்ளூா் அருகே காா் -இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே சத்தரை மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் ராஜி(51). இவா் மப்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் வழக்கம் போல் சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
அப்போது, பாத்திமாபுரம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந் ராஜியை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி செண்பகவல்லி அளித்த புகாரின் பேரில் மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




