இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

லாரியில் கடத்தப்பட்ட 800 கிலோ குட்கா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் கன்டெய்னா் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ குட்கா பொருள்கள்.

Updated On :

கும்மிடிப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் கன்டெய்னா் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த கன்டெய்னா் லாரியை போலீஸாா் தடுத்து சோதனை செய்தனா்.

அப்போது அந்த கன்டெய்னா் லாரியில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள் மத்தியில் மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா், போலீஸாா் அந்த லாரியில் இருந்த 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்து லாரியில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் பெங்களூரை சோ்ந்த வெங்கடேஷ் (33), உடன் வந்தவா் நிஜாமுதீன் (21) என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER