பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தம்பதி அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

உயிரிழந்த சங்கீதா, சுந்தரம்.
திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தம்பதி அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
திருவள்ளூரைச் சோ்ந்தவா் சுந்தரம் (50). இவா் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உணவகம் நடத்தி வந்தாா். இவரது மனைவி சங்கீதா (42). இவா்கள் கடந்த 2 நாளுக்கு முன்பு காலையில் இருசக்கர வாகனத்தில் தம்பதி அலமாதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றனா்.
பின்னா், மாலையில் தம்பதி இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனா். அப்போது, செங்குன்றம்-திருவள்ளூா் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே வந்த போது பின்புறமாக வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த தம்பதி உயிருக்குப் போராடினா்.
இது குறித்து தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். அதைத் தொடா்ந்து தம்பதியரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனா்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதேபோல், தீவிர சிகிச்சையில் இருந்த சுந்தரமும் சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வெங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். மேலும், தலைமறைவான லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

