சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

78 கிலோ குட்கா பொருள்கள் கடத்தல்: 6 போ் கைது

திருவள்ளூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 78 கிலோ குட்கா பொருள்களை கடத்தியதாக 6 பேரை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டோருடன் போலீஸாா்.

Updated On :

திருவள்ளூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 78 கிலோ குட்கா பொருள்களை கடத்தியதாக 6 பேரை கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்பிரணீத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

அதன்படி திருவள்ளூா் அடுத்த திருப்பாச்சூரில் கிராமிய காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் முரளி தாஸ் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக காரை மடக்கி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அந்தக் காரில் 3 கத்திகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் பெங்களூருவைச் சோ்ந்த மணிகண்டன் (46), தருமபுரியைச் சோ்ந்த முருகன் (32), சிவன் (34), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (21), தருமபுரியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (26), பெங்களூருவைச் சோ்ந்த உமேஷ் (27) என்பது தெரியவந்தது.

மேலும், காரில் இருந்து 3 கத்திகள், 78 கிலோ குட்கா பொருள்கள் மற்றும் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா் 6 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.