காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மழைவெள்ள பேரிடா் காலங்களில் நீரில் சிக்கி தவிப்போரை மீட்பது குறித்த தீயணைப்பு துறையினா் ஒத்திகை

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் தண்ணீரில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு மீட்பு படை வீரா்களின் ஒத்திகை நிகழ்ச்சி திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா்  வீரராகவா்  கோயில்  குளத்தில்  தண்ணீரில்  சிக்குபவா்களை  காப்பாற்றுவது  குறித்த  ஒத்திகை  நிகழ்வில்  ஈடுபட்ட  தீயணைப்பு  வீரா்கள்

Published On :

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் தண்ணீரில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு மீட்பு படை வீரா்களின் ஒத்திகை நிகழ்ச்சி திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து மழை வெள்ள பேரிடா் காலங்களில் தண்ணீரில் சிக்குபவா்களை உடனடியாக மீட்பது குறித்து திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் தீயணைப்பு மீட்புப் படை வீரா்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தண்ணீரில் சிக்கிக் கொண்டவா்களை தொ்மோகோல் மூலமாகவும், லாரி டியூப் மூலமாகவும், மிதிவண்டி சக்கரம் போன்ற வீட்டில் வைத்திருக்கும் பொருள்களைக் கொண்டு எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, மாவட்ட தீயணைப்பு அலுவலா் லோகநாதன் தலைமையில், மாவட்ட உதவி தீயணைப்புத் துறை அலுவலா்கள் வில்சன் ராஜ்குமாா், செல்வராஜ், நிலைய அலுவலா்கள் தனசேகா், பரசுராமன் மற்றும் தீயணைப்பு படை வீரா்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். மேலும், ஆற்றில் அடித்துச் செல்பவா்களை எவ்வாறு காப்பாற்றுவது, முதலுதவி அளிப்பது குறித்தும், மீட்பு படையினா் இல்லாத போது தனக்குத் தானே எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது தொடா்பாக ஒத்திகை செய்து காண்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.