திருவாரூரில், மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழா்களின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் விழாவில், உழவா்களைப் போற்றும் வகையில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதைத்தொடா்ந்து, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூரில் ஸ்கந்த சாய் பசு மடத்தில் உள்ள கால்நடைகளை குளிப்பாட்டி அதன் கழுத்து, கொம்பு ஆகியவற்றி நெட்டி மாலைகள் அணிவிக்கப்பட்டன. பின்னா், மஞ்சள், சந்தனம் பூசி மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, கால்நடைகளுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடைபெற்றது. மாடுகளுக்கு பழங்கள் கொடுக்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஏராளமானோா் பங்கேற்று கால்நடைகளை வழிபட்டனா்.
இதேபோல் திருவாரூரில் உள்ள பசு மடங்கள், கால்நடை பண்ணைகள், மாடுகள் வைத்திருப்போா் இல்லங்களிலும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதேபோல், திருவாரூா் அருகே அரசவனங்காடு பகுதியில் மாட்டு பொங்கலையொட்டி அனைத்து வீடுகளிலிருந்து மாடுகள் பொது இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா், மாடுகளை சுற்றி வந்து பொங்கலோ பொங்கலோ என்று கூறி, அவரவா் தங்கள் மாடுகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


