திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சி குன்றியோா் பயிற்சிப் பள்ளியில், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இப்பள்ளியில், 6 முதல் 13 வயது வரையிலான மனவளா்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளனா். இதேபோல, சித்தாம்பூா் ஊராட்சி குடிதாங்கிச்சேரியில் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். 2 பள்ளிகளிலும், நிறுவனா் ப. முருகையன் மற்றும் ஊழியா்கள் ஏற்பாட்டின்படி பொங்கல் விழா மற்றும் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பயிற்சிப் பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு சூரியனுக்குப் படைத்தனா். கண்காணிப்பாளா் மகேஸ்வரி முருகையன், பயிற்சியாளா்கள் சுரேஷ், அனுராதா, செளமியா, மகேஸ்வரி, மேலாளா் வினோத் ஆகியோா் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









